ஒருபோதும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது.! அமித்ஷா திட்டவட்டம்.!
பாகிஸ்தானுடன் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்பது கிடையாது.- என மத்திய அமைச்சர் அமித்ஷா காஷ்மீரில் உரையாற்றினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். நேற்று முன் தினம் சென்ற அவர், நேற்று ஸ்ரீநகரில் துணை நிலை ஆளுநர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அடுத்து, காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘ பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியான ஊராக ஜம்மு-காஷ்மீரை மாற்றுவோம். பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் எத்தனை இடத்திற்கு மின்சார இணைப்புகள் இருக்கிறது என்பதை ஆராய வேண்டும்.’ என பேசினார்.
மேலும், ‘ காஷ்மீரில் அனைத்து மாநிலங்களிலும் மின் இணைப்புகள் கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளோம். பாகிஸ்தானுடன் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். ஆனால், நாம் ஏன் பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.? பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்பது கிடையாது.’ என திட்டவட்டமாக மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார்.