வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தி…!
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் இருக்கும் நிலையில், மெகபூபா முக்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு முன்னாள் முதல்-மந்திரியின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது என்றால் சாதாரண மனிதர்களின் நிலையை நினைத்து பார்க்க முடியாது என்று குற்றம்சாட்டியுள்ள அவர் வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் இருக்கும் நிலையில், மெகபூபா முக்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.