மனு என்ற பெயரை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது -தமிழிசை செளந்தரராஜன்
பசுவின் கன்றை கொன்றதால் தனது மகனையே தேர்க்காலில் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி நமது தமிழகம் என்பதில் பெருமை என ஆளுநர் தமிழிசை பேச்சு.
புதுச்சேரியின் காரைக்கால் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நீதித் துறை குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கூடுதல்
உரிமையியல் நீதிமன்ற கட்டடத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை, ஏழை எளியோருக்கு மருத்துவம் கிடைப்பது போல் சிறப்பான சட்ட உதவியும் காலத்துடன் கிடைக்க வேண்டும். தாமதப்படுத்தாமல் நீதி கிடைக்க நீதித்துறை செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பசுவின் கன்றை கொன்றதால் தனது மகனையே தேர்க்காலில் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த
பூமி நமது தமிழகம் என்பதில் பெருமை. ஆனால், தற்போது தமிழகத்தில் மனு என்ற பெயரை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.