மழையில் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.! ஜி.கே.வாசன் கோரிக்கை.!
தமிழ்நாட்டில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்குஅரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என தாமகா தலைவர் ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வளிமண்டலஅடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையால், அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும், அறுவடை செய்து வைத்திருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் இருக்கின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், ‘ தமிழ்நாட்டில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்குஅரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் மூட்டைகளை உடனடியாக அவ்வப்போது கொள்முதல் செய்வதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார்.