தூர்வாரும் பணிகளுக்கு ரோபோடிக் இயந்திரம் – அமைச்சர் எ.வ.வேலு
தூர்வாரும் பணிகளை முடிக்க ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு என தகவல்.
சென்னையில் நீர்வழி கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முடிக்க வெளிநாட்டு ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 10% பணிகள் மட்டுமே மிச்சமிருப்பதால் அதையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பருவமழைக்கு முன்பதாக மழைநீர் வடிகால் பணிகளை முடிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார். இதனிடையே, சட்டப்பேரவை கூட்ட தொடர் அறிவிப்பு தொடர்பாகவும், தமிழகம் முழுவதும் நடக்கும் கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் 10ம் தேதி நடைபெறுகிறது. காலையில் கோவை மதுரை மண்டலம், மதியம் திருச்சி, சென்னை. மண்டல பொறியாளர்களுடன் ஆய்வு செய்கிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.