#INDvsSA: ஒருநாள் தொடரில் விளையாடும் தவான் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு !

Default Image

தென் ஆப்பிரிக்க அணிக்கும் எதிராக விளையாடும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி-20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 3ஆவது போட்டி நாளை இந்தூரில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒருநாள் போட்டித்தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.

முகேஷ் குமார் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகிய புதுமுகங்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தவான் கேப்டன் ஆகவும், ஷ்ரேயஸ் ஐயர் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி-20 உலகக்கோப்பையை முன்னிட்டு சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் புதுமுக வீரர்கள் இந்த தொடரில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடர் அக்-6 ஆம் தேதி லக்னோவில் தொடங்க இருக்கிறது.

இந்திய அணி(ஒருநாள்): ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரஜத் பட்டிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாத் , ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாஹர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்