அந்த படம் ஜெயித்து இருந்தால் 2,3,4 பாகங்கள் வந்திருக்கும்.! வருத்தப்பட்ட இயக்குனர் செல்வராகவன்.!
தமிழ் சினிமாவில் ஒரு மறக்கமுடியாத திரைப்படம் எதுவென்றால் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் என்றே கூறலாம் . செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென் ,பார்த்திபன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.
படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கி.பி. 1279 இல் நடந்த சோழர் ஆட்சியில் நடந்த சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பாதி மக்களுக்கு படம் புரியவில்லை. இதனால் படம் அப்போது பெரிதளவில் பேசப்பட வில்லை.
இதையும் படியுங்களேன்- 40 வயசுக்கு அப்புறம் இவ்ளோ வாய்ப்பு வருது…. ரகசியத்தை உளறிக்கொட்டிய ஜோதிகா.!
பிறகு ரீ-ரிலீசான பின் இந்த மாதிரி ஒரு படத்தை கொண்டாட மறந்துவிட்டோம் என பலரும் வருத்தப்பட்டது உண்டு. முதல் பாகத்தை தொடர்ந்து விரைவில் இரண்டாவது பாகம் வெளியாகும் எனவும், அதில் தனுஷ் நடிப்பார் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 2ஆம் பாகத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் வெளியான போது கொண்டாடப்படாதது குறித்து இயக்குநர் செல்வராகவனிடம் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒரு படைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காதபோது நிச்சயம் அது வருத்தத்தை கொடுக்கும். அப்படித்தான் ஆயிரத்தில் ஒருவனும். அந்தப் படம் வந்திருந்தபோதே கொண்டாடப்பட்டிருந்தால் நிச்சயம் ஆயிரத்தில் ஒருவன் 2, 3, 4 பாகங்கள் என சென்றிருக்கும்” என்று கூறியுள்ளார்.