புதுச்சேரியில் வலுக்கும் போராட்டம்.! நள்ளிரவில் மின்துறை ஊழியர்கள் கைது.! 20 பேர் மீது வழக்குப்பதிவு.?
புதுச்சேரியில் நேற்று நள்ளிரவில் காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். அவர்களை மண்டபத்தில் வைத்துவிட்டு பின்னர் விடுவித்தனர்.
புதுச்சேரியில் மின்சாரத்துறையை அரசு தனியார்மயமாக்கும் முடிவில் தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் பேச்சுவார்த்தை தொடங்கும் போதே மின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதே ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
அண்மையில் தனியார்மயமாக்கல் குறித்து டெண்டர் கோரப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சிலர் துணை மின் நிலையங்களில் உள்ள பியூஸ்களை கழட்டினார். இதனால் புதுசேரி முழுவதும் இருள் மயமாகியது.
இதனை அடுத்து நேற்று நள்ளிரவில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர்கள் கிட்டத்தட்ட 500 பேருக்கு மேலானோரை மின்சாரத்துறை அலுவலகத்திலேயே புகுந்து துணை ராணுவப்படையினர் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள், காவலர் சமுதாய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் எந்த வேலைகளிலும் ஈடுபடமாட்டோம். அறவழியில் மட்டுமே போராடுவோம் என துணை ஆட்சியர் முன்பு உறுதி அளித்த பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், புதுசேரியில் மின் தடை ஏற்படுத்தியதாக கூறி 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.