வருகிறது வடகிழக்கு பருவமழை… உஷார் ஆகிய சென்னை மாநகராட்சி.! நடவடிக்கைகள் தீவிரம்.!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடையது சென்னை மாநகராட்சி. 30 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் கழிவுநீர் பிரச்சனை, குடிநீர் வழங்கல் பிரச்சனைகளை மக்கள் தொடர்புகொண்டு தீர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்ய தொடங்கும். இந்த பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்துவிட்டாலோ, அல்லது வேறு சில காரணங்களாலோ பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிவிடும்.
இதனை கட்டுப்படுத்த தற்போது சென்னை மாநகராட்சி களத்தில் இப்போதே இறங்கிவிட்டது. வரும் திருவெற்றியூர் முதல் சோழிங்கநல்லூர் வரையில் மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் சிறப்பு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 30 அலுவலர்கள் பகுதி வாயிலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தொலைபேசி எண்களை குடிநீர் வாரியம் மூலமாக அந்தந்த பகுதி மக்களுக்கு தெரியப்படுத்திவிட்டனர்.
இவர்கள் மூலமாக பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் தொடர்பான பிரச்சனைகளை தெரிவித்து தீர்த்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.