ரயில் பயணத்தின் போது ரத்த அழுத்த பாதிப்பு.! தமிழக அமைச்சர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.!
அமைச்சர் மெய்யநாதன், ரயில் பயணத்தின் போது ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல் நல குறைவுக்கான சிகிச்சையை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் எடுத்துக்கொண்டார். தற்போது பூரண குணமடைந்து விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் மெய்யநாதன். இவர் அண்மையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்ல ரயில் பயணம் மேற்கொண்டார்.
அந்த சமயம் ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக, இடையில் ரயில் நிறுத்தப்பட்டு, பின்னர் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் குணமடைந்து அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்றார். தற்போது அமைச்சர் பூரண குணமடைந்து ஓய்வு எடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளன.