ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு..! இன்று முதல் 5 நாட்கள் மக்கள் பார்வையிட அனுமதி…!

Default Image

சென்னை ஆளுநர் மாளிகையில் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலுவினை பொதுமக்கள் பார்வையிட அனுமதி. 

சென்னை ஆளுநர் மாளிகையில் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலுவினை 01.10.2022 முதல் 05.10.2022 பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை ஆளுநர் மாளிகையில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி மற்றும் ஆளுநரின் துணைவியார் திருமதி. லட்சுமி ரவி ஆகியோரால் 26.09.2022 அன்று திறந்து வைக்கப்பட்ட ‘நவராத்திரி கொலு’, பிரபலங்கள் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பல்வேறு சமூகத்தினரின் மற்றும் வேண்டுகோளுக்கிணங்க, ஆளுநர் பொதுமக்களின் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள ‘நவராத்திரி கொலு’, தற்போது 01.10.2022 முதல் 05.10.2022 (புதன்கிழமை) நாள்தோறும் மாலை 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாணவர்கள் உட்பட பொது மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.

விருப்பமுள்ள நபர்கள் தங்கள் பெயர், பாலினம், முகவரி, தொடர்பு எண், அடையாளச் சான்று மற்றும் பார்வையிடும் நாள் ஆகியவற்றை navaratrirb22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்முறையாக, தற்போது ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு’ ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘முதலில் வருபவர்கள் – முதலில் பார்வையிடலாம்’ என்ற முன்னுரிமையின் அடிப்படையில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 80 நபர்கள் வரை பார்வையிடலாம். பார்வையிடும் நேரம் நான்கு கட்டங்களாக (Slots) ஒதுக்கீடு செய்யப்படும். (ஒருகட்டத்திற்கு (per slot) 20 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்) ‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்