#BREAKING: இவர்களுக்கு உண்மை சான்றிதழை திரும்ப வழங்க ஐகோர்ட் உத்தரவு!

Default Image

முதுநிலை மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு உண்மை சான்றிதழைகளை திரும்ப வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு. 

முதுநிலை மருத்துவ மேற்படிப்பை முடித்த 2 ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு சான்றிதழை திரும்ப வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பணியாற்றி வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு, அவர்களின் உண்மை சான்றிதழைகளை திரும்ப வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 2 ஆண்டு ஒப்பந்த காலத்தில் வாய்ப்பு வழங்காததால் உண்மை சான்றுகளை திருப்பி தரக்கோரி மருத்துவ மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

2020-ல் மருத்துவ மேற்படிப்பு முடித்த அருண்குமார், சுபேத் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. படிப்பை முடித்த பின் 2 ஆண்டு பணியாற்ற ஒப்பந்தம் போட்டியுள்ளதால் சான்றுகளை பெற மனுதாரர்களுக்கு உரிமை உண்டு என்றும் படிப்பை முடித்த 2 ஆண்டுகள் நிறைவடையாவிட்டால் அவர்களின் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், பணியில் சேர கடிதம் அனுப்பியும் சேராதவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்