2023இல் பி.எஸ்.என்.எல் 5ஜி.! மத்திய அமைச்சர் புதிய தகவல்.!
ஆகஸ்ட் 15, 2023இல் இருந்து பி.எஸ்.என்.எல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்படும். – என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்.
கடந்த ஆக்ஸ்ட் மாதம் 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் முடிவடைந்த நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி 5ஜி அலைக்கற்றை சேவையை இந்தியாவில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் மட்டும் 5ஜி சேவை தொடங்கப்பட உள்ளது.
அந்த நிகழ்ச்சில் பிரதமர் பேசியதை அடுத்து, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் பேசுகையில், ‘ அடுத்த 6 மாதத்தில் பி.எஸ்.என்.எல் 5ஜி சேவை தொடங்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 80 முதல் 90 விழுக்காடு பகுதி நகரங்களில் பிஎஸ்என்எல் 5ஜி சேவை தொடங்கப்படும்.’ எனவும் பேசினார்.
அவர் மேலும் கூறுகையில், ‘ வருகிற ஆகஸ்ட் 15, 2023இல் இருந்து பி.எஸ்.என்.எல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்படும் .’ என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் உறுதியாக தெரிவித்தார்.