தமிழகம் முழுவதும் அக்.11ம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி..!
தமிழகம் முழுவதும் அக்.11ம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என அறிவிப்பு.
அக்.11ம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., மதிமுக, விசிக, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் பங்கேற்கிறது.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம். அனைவரும் வருக.’ என பதிவிட்டுள்ளார்.
சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்.
மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம். அனைவரும் வருக.
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) October 1, 2022
/p>