குருகிராமில் உள்ள மாலில் தீ விபத்து.. விரைந்த தீயணைப்பு வாகனங்கள்..
குருகிராமில் உள்ள குளோபல் ஃபோயர் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பல தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
குருகிராமில், கோல்ஃப் கோர்ஸ் சாலையில் உள்ள குளோபல் ஃபோயர் மாலின் முதல் தளத்தில் இன்று(அக் 1) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல தீயணைப்பு வாகனங்களால், அங்கு ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
#WATCH | Gurugram: Fire breaks out at Global Foyer mall, several fire tenders on spot; more details awaited pic.twitter.com/OtwJjmKf59
— ANI (@ANI) October 1, 2022