நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும்.!மதுரையில் இபிஎஸ் பேச்சு.!
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேரத்திலும் வரும் என மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திமுகவுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அதில், அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.
அடுத்ததாக நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது , மதுரையில் வீட்டு வீடு நல்ல குடிநீருக்காக அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு அதனை செயல்படுத்தினோம் என பேசியிருந்தார்.
மேலும் பேசுகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வரும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.