ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மறுப்பு.! முதல்வர் ஸ்டாலின் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி.! சீமான் வரவேற்பு.!
தமிழக காவல்துறையினர், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்ததற்கு, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வரவேற்பு மற்றும் நன்றி என டிவீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று, ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்த உயர்நீதிமன்ற அனுமதியோடு திட்டமிட்டு இருந்தனர். அதற்க்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழக காவல்துறையின் இந்த முடிவுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனதுடிவிட்டர் பக்கத்தில் வரவேற்பும் நன்றியும் என பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், ‘ மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன்.’என்றும்,
‘சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்’ என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், ‘ இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன்.’ இவ்வாறு தனது ஆதரவை சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், அதனை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இத்னை அடுத்து, தமிழக காவல்துறை சார்பில் சீராய்வு மனுவும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன்.
(1/3) @CMOTamilnadu @mkstalin
— சீமான் (@SeemanOfficial) September 29, 2022