காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை.! அசோக் கெல்லாட் திடீர் அறிவிப்பு.!

Default Image

காங்கிரஸ் தலைவர் பதவியில் நான் போட்டியிடவில்லை என அசோக் கெலாட் தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் அறிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட மறுத்த பிறகு, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சி விதிப்படி, ஒருவருக்கு ஒரு பதவிதான். ஆதலால் , காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை அசோக் கெலாட் ஏற்றுக்கொண்டால், ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ஆதலால்,  அடுத்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்க கட்சி தலைமை முடிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து, அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 92 பேர், ராஜினாமா செய்துவிடுவதாக  காங்கிரஸ் தலைமைக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

இதனால், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி களையும் அபாயம் எழுந்துவிட்டது. நிலைமை அறிந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட், ‘ தான் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகுவதாகவும், இதனால் ஏற்பட்ட அரசியல் சச்சரவுகளுக்கு சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்டதாகவும்’ அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Germany 2 Dead
Heinrich Klaasen
viduthalai 2
kovi chezhiyan
Zia ur Rehman
rain