நேர்முகத்தேர்வு நடத்தும் அதிசய ரோபோ..!
ரஷ்யாவில் ரோபோ ஒன்று, ஒரு நாளைக்கு 1500 பேரை நேர்காணல் செய்து வேலைக்கு சேர்த்து வருகிறது. பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேஸான், ‘அமேஸான் கோ’ என்ற பெயரில் ஒரு செயல்திட்டத்தை அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தியுள்ளது
இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் பணியாளர்கள் இல்லாமல் இயங்க உள்ள Super Market ஆகும். இந்நிலையில், மனித வள மேம்பாட்டு அதிகாரிகளின் வேலைக்கு ரோபோக்களே நேர்முகத்தேர்வு நடத்துகின்றன.
நபர் ஒருவரிடம் ஒரு நாளைக்கு எத்தனை பேரை தெரிவு செய்வீர்கள் என்ற கேள்விக்கு 50 பெர் என பதிலளிக்கிறார். ஆனால், ரோபோ வேரா 1500 பேரை ஒரு நாளைக்கு நேர்முகத்தேர்வு செய்ய முடியும் என்று கூறுகிறது.
இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள 200 நிறுவனத்தில் ரோபோட் வேரா நேர்முகத்தேர்வுக்கான பணியில் இறங்கியுள்ளது.
2017ஆம் ஆண்டு பல்வேறு நிறுவனத்தின் உதவியோடு ரோபோட் வேரா தயாரிக்கப்பட்டது. இதனைத் தயாரித்த அலெக்ஸி கோஸ்டெரேவ் கூறுகையில்,
‘தற்போது 200 நிறுவனங்களில் ரோபோட் வேரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வேரா 85 சதவித விண்ணப்பதார்களின் கேள்விகளுக்கு விடையளித்து வருகிறது. வரும் காலங்களில் இது அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோபோட் வேரா ஒரு நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை ஒன்லைனில் தேடி எடுப்பத்தில் இருந்து, அவர்களிடம் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்வது வரை அனைத்து வேலைகளையும் தானே மேற்கொள்கிறது.
இது தற்போது ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளில் பேசி வருகிறது. ஆண், பெண் விண்ணப்பதார்களை குரல் மூலமாக எளிதாக அடையாளம் கண்டு நேர்முகத்தேர்வை மேற்கொள்கிறது’ என தெரிவித்துள்ளார்.