”குடியரசுத் தலைவரும், ஆளுநர்களும் மத்திய அரசின் ஏஜென்ட்கள்” – சிவசேனா..!

Default Image

 

குடியரசுத் தலைவரும், ஆளுநரும் சில நேரங்களில் மத்திய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகிறார்கள் என்று சிவசேனா கட்சி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

கர்நாடக தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைத்து, எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஆனால், அவர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’வில் எழுதிய தலையங்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

”குடியரசுத் தலைவரும், ஆளுநர்களும் சில நேரங்களில் மத்திய அரசின் ஏஜென்ட்கள் போல் செயல்படுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளபடி மாநிலத்தின் தலைமைப் பொறுப்பிலும், நாட்டின் முதல் குடிமகனுமாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொள்ளக்கூடாது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் தோல்வி அடைந்தது எங்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆனால், கர்நாடகத்தைக் கைப்பற்றுவதுதான் காங்கிரஸ் இல்லாத நாடாக மாற்றும் வழி அல்ல.

கர்நாடகத்தில் பாஜகவின் செயல்பாடுகள் ஜனநாயகத்தை, தனிநபர் சுதந்திரத்தை,பத்திரிகை சுதந்திரத்தை பலவீனமடையச் செய்யும். நமக்குச் சுதந்திரமான நாடாளுமன்றமும், கைகள் கட்டப்படாத ஊடகமும் அவசியமாகும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்பிஐ கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே, அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக பாஜக நடந்தால், தான் கூட்டணியில் இருந்து விலகிவிடுவேன் எனத் தெரிவித்திருந்தார்.Image result for ராமதாஸ் அத்வாலே

அப்படி என்றால், கர்நாடகாவில் நடந்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இல்லை என்கிறாரா ராமதாஸ் அத்வாலே? ஏன் அவர் இன்னும் கூட்டணியில் இருந்து விலகாமல் இருக்கிறார்.

அரசியலமைப்புச் சட்டம் மக்களின் எதிர்பார்ப்புகளையும், நலத்தையும் சுற்றியே இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் காவலர்கள் மக்கள்தான். ஒருபோதும், மக்களை அரசியலமைப்புச் சட்டம் அழுத்தம் கொடுக்கக்கூடாது. எந்த அரசும் அரசியலமைப்புச் சட்டத்தை பயன்படுத்தி, தங்களின் முடிவுகளை மக்கள் மீது திணிக்கக் கூடாது.

கர்நாடகத்தில் உள்ள பாஜக தலைவர் ஸ்ரீராமலு போன்ற நபர்களிடம் இருந்து ஜனநாயகத்தைக் காப்பது அவசியமாகும். ஜனநாயகத்தை வெட்கப்படவைக்கும் காட்சி முடிந்துவிட்டது. இனி நாளை என்ன நடக்கப்போகிறதோ என நமக்குத் தெரியாது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்