இது தமிழக அரசுக்கு அவமானமாக தெரியவில்லையா? – டிடிவி
ஊதிய உயர்வுக்காகவும் நியாயமான கோரிக்கைக்காகவும் அரசு அரசு மருத்துவர்களை போராட வைப்பது தமிழக அரசுக்கு அவமானமாக தெரியவில்லையா? என டிடிவி தினகரன் ட்வீட்.
சென்னையில் அரசு மருத்துவர்கள் அரசாணை 354-ன் கீழ் 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை 4-ஐ வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து யுடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்க்கத்தில், ‘அரசு மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு நீதி வழங்கவும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிப்படி., அரசாணை 354-ன் கீழ் 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை(Pay Scale) 4-ஐ வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சென்னையில் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்த அரசு மருத்துவர்களை இப்படி ஊதிய உயர்வுக்காகவும் நியாயமான கோரிக்கைக்காகவும் போராட வைப்பது தமிழக அரசுக்கு அவமானமாக தெரியவில்லையா? உடனடியாக அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை தி.மு.க அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
உடனடியாக அரசு மருத்துவர்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை தி.மு.க அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன். (4/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 28, 2022