முதலமைச்சருடன் இந்திய தொழிற்கூட்டமைப்பினர் சந்திப்பு!
இந்திய தொழில் கூட்டமைப்பினர் ,தொழில்துறையில தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள் செயல்முறைக்கு வந்தால், வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். இந்த கூட்டமைப்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு மண்டல நிர்வாகிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தொழில்துறை வளர்ச்சி அடைவதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினர். வேலை வாய்ப்புக்காக நகர்புறங்களை நோக்கி மக்கள் வருவதை தடுக்க, புதிதாக தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.