‘பொறுத்திருந்து பாருங்கள்’ – பண்ரூட்டி ராமசந்திரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு..!
ஓபிஎஸ் சென்னை அசோக் நகரில் உள்ள பண்ரூட்டி ராமச்சந்திரனின் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
நேற்று அதிமுகவின் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமசந்திரனை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நீக்கி ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஓபிஎஸ் சென்னை அசோக் நகரில் உள்ள பண்ரூட்டி ராமச்சந்திரனின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், பொறுத்திருந்து பாருங்கள், தலைவரோடு, அம்மாவோடு இருந்தவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து அம்மாவின் ஆசியை பெறுவோம் என தெரிவித்துள்ளார்.