சார்லோட் டீனை 73 வது முறை கிரீஸை விட்டு வெளியேறிய போதுதான் அவுட் செய்தேன் – தீப்தி ஷர்மா
இங்கிலாந்து மகளிர் அணியின் பேட்டர் சார்லோட் டீன், 72 முறை நான்-ஸ்ட்ரைக்கர் திசையில் தனது கிரீஸை விட்டு வெளியேறினார் என்று தீப்தி ஷர்மா கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணி மோதிய 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்றது. 3 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் சார்லோட் டீன் ஐ, தீப்தி ஷர்மா 44ஆவது ஓவரில் “மன்கட்” முறையில் ரன்அவுட் செய்தார்.
“மன்கட்” முறை கிரிக்கெட்டின் விதிகளில் இருந்தாலும், இது விளையாட்டின் அறத்தை உடைப்பதாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து தீப்தி ஷர்மா பேசும்போது சார்லோட் டீன், 72 முறை நான்-ஸ்ட்ரைக்கர் திசையில் தனது கிரீஸை விட்டு வெளியேறினார். 73 வது முறை வெளியேறும் போது நான் ரன்அவுட் செய்ததாகக் கூறினார்.
இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் இது குறித்து பேசும் போது, சார்லோட் டீன் ஐ, “மன்கட்” முறையில் தீப்தி ஷர்மா ரன்அவுட் செய்வதற்கு முன் பலமுறை எச்சரித்துள்ளதாக கூறுவது பொய் என்று கூறியுள்ளார். எந்த எச்சரிக்கையும் தரவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியா “மன்கட்” ரன்அவுட் முறையில் உறுதியாக இருந்ததாகவும், எச்சரித்ததாக பொய் சொல்லி அதை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் தெரிவித்தார்.