#BREAKING: சசிகலா வழக்கு – அக்.26-ல் இறுதி விசாரணை!

Default Image

உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சசிகலா தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை அக்.26-ல் நடைபெறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த சசிகலா மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. சசிகலா தொடர்ந்த வழக்கை இறுதி விசாரணைக்காக அக்.26-ல் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது செல்லாது என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த மனுவின் இறுதி விசாரணை அக்.26-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்