கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை ! குமரி மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வட்னெரே கூறுகையில்,கேரளாவின் கோழிக்கோட்டில் தான் நிபா வைரஸ் தாக்குதல் உள்ளதாகவும், தமிழக எல்லையை ஒட்டிய கேரள பகுதிகளில் இல்லை என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கேரளாவுக்குப் பணிக்குச் சென்று திரும்புபவர்களுக்குக் காய்ச்சல் உள்ளதா என்பதை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.