இன்று முதல் உச்சநீதிமன்ற வழக்குகள் நேரடி ஒளிபரப்பு.! விவரம்இதோ…

Default Image

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்ப மாகியுள்ளது. அதனை webcast.gov.in/scindia என்ற தளத்தில் சென்று பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு சம்பந்தமாக நடைபெறும் வழக்கு விசாரணைகளை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யும் கோரிக்கை இன்று முதல் நடைமுறைப்படுத்தபட்டுள்ளது.

அதன்படி, உச்சநீதிமன்றத்தில் நேரடி ஒளிபரப்புக்கு முதல் வழக்காகக, மகாராஷ்டிரா அரசியல் வழக்கானது உச்சநீதிமன்ற அரசியலமைப்பு நீதிபதி அமர்வின் கீழ் நடைபெறுகிறது. இதன் விசாரணையை உச்சநீதிமன்றத்தின் இணையதளமான webcast.gov.in/scindia எனும் தளத்தில் நேரடியாக காணலாம்.

செப்டம்பர் 27 (இன்று) முதல் அரசியலமைப்பு சம்பந்தமான அனைத்து விசாரணைகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்திருந்தது. அதன் படி இன்று முதல் அந்த நேரடி ஒளிபரப்பு தொடங்கியுள்ளது.

இதன்படி, மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி வழக்கு மற்றும் டெல்லியில் நிர்வாக சேவைகளின் கட்டுப்பாடு  தொடர்பான வழக்கு, ஈ.டபிள்யூ.எஸ் வகைக்கு 10 சதவிகித ஒதுக்கீட்டை வழங்குவதற்கான முடிவுக்கு எதிரான  வழக்கு ஆகியவை உச்சநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பு செய்து உள்ளது.

இந்தியாவின் தலைமை நீதிபதி யு லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு டெல்லி – ஈ.டபிள்யூ.எஸ் ஒதுக்கீட்டு வழக்கை விசாரணை செய்ய உள்ளது. மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனையில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே  மற்றும அவரது ஆதரவாளர்கள் மற்றும் தற்போதைய முதல்வர் எக்னாத் ஷிண்டே  தலைமையிலான ஆதரவாளரக்ள் இருவரும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி சந்திரச்சுட் தலைமையிலான அமர்வு விசாரணை செய்ய உள்ளது. நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான ஒரு அமர்வு டெல்லியில் அதிகாரிகளின் இடமாற்றங்கள் குறித்த வழக்கை விசாரிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்