அரசு நிகழ்ச்சியை திடீரென புறக்கணித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Default Image

ஏற்பாடு சரியில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் மருத்துவத்துறை அமைச்சர்.

தமிழகம் முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்பட கூடிய காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என ஆய்வு செய்யும் வகையிலும், அதேபோல் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையிலும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் பருவ கால காய்ச்சலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் நேரடியாக 1000 மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 100 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதனால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்தாய் வாழ்த்து பாடல் நிறைவடைந்த நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே வெளியேறினார். பேரளவுக்கு தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளீர்கள், இதனால் நான் கிளம்புகிறேன் என அதிகாரிகளிடம் கோபமாக அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது.

எனவே, உரிய ஏற்பாடு செய்யவில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியேறினார் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், இது சிறிய பயிற்சி மையம் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்களை ஒன்று சேர்ப்பது கடினமானது. இதனால், நிகழ்ச்சியில் குறைந்த அளவில் ஊழியர்களை வைத்தும், மற்றவர்களை காணொளி மூலமாக வரவழைத்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. விரைவில் பெரியளவில் மீண்டும் அமைச்சரவை அழைத்து நிகழ்ச்சியை நடத்துவோம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்