#Breaking : தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை.!

Default Image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வரும் ஒக்டோபர் மாத இறுதியில் தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது .

இந்நிலையில், இன்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . அதன்படி, தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, கள்ளகுறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர் என 17 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்