மீண்டும் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனை.. இன்று 30 பேர் கைது.!
உத்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
கடந்தவாரம் நாடுமுழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) , பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மாற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில், நாடுமுழுவதும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்கத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் சம்பந்தப்பட்ட அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தற்போது அடுத்ததாக என்.ஐ.ஏ சோதனையை அடுத்து, மாநில காவல்துறையினர் உத்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனை நடவடிக்கைகளை அடுத்து, பி.எஃப்.ஐ நிர்வாகிகள், குஜராத் மாநிலத்தில் 10 பேரும், கர்நாடகாவில் 50 நிர்வாகிகளும், அசாமில் 25 நிர்வாகிகளும், டெல்லியில் 30 நிர்வாகிகளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.