ஊழியர் அளிக்கும் தவறான தகவல் பணி நீக்கத்துக்கு வழிவகுக்கும் – உச்ச நீதிமன்றம்

Default Image

தவறான தகவல் பணி நீக்கத்துக்கு வழிவகுக்கும் என பணி நீக்கம் செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் அதிகாரிகளின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு.

ஒரு ஊழியரின் உடல் தகுதி மற்றும் பதவிக்கான தகுதியைப் பாதிக்கும் விஷயங்கள் தொடர்பான தவறான தகவல்களை மறைத்து வைத்தது அல்லது வழங்கியது கண்டறியப்பட்டால் அவரை பணியிலிருந்து நீக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு ஊழியரின் கைது, வழக்கு, தண்டனை போன்றவற்றின் சரிபார்ப்பு படிவத்தில் முக்கியமான உண்மைகளை மறைப்பதும், தவறான அறிக்கையை வெளியிடுவதும், ஊழியரின் குணம், நடத்தை ஆகியவற்றில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறியது.

கிரிமினல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு ஊழியர் தானாகவே அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட மாட்டார் என்றும் மாறாக, தனிநபரின் பின்னணியை பரிசீலித்து, அந்த பதவியை நிரப்ப அவர்கள் தகுதியானவர்களா என்பதை தீர்மானிக்க அதிகாரிகளுக்கு விருப்பம் இருக்கும் எனவும் கூறினர். சதீஷ் சந்திர யாதவ் சிஆர்பிஎஃப்-ல் கான்ஸ்டபிளாக (பொதுப் பணி) பணியாற்றினார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 147, 323, 324, 504 மற்றும் 506-ன் கீழ் உள்ள குற்றங்களுக்காக அவர் மீது ஒரு கிரிமினல் வழக்கு இருப்பதை அவர் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

பதவி நீக்கத்தை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த சதீஷ் சந்திர யாதவ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜோதி தத் ஷர்மா, மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் அற்பமானவை. தார்மீக சீர்குலைவு எதுவும் இல்லாதது என்றும் வாதிட்டார். மறைக்கப்பட்டதை, நம்ப வேண்டும் என்று கருதி, பொது வேலை வாய்ப்பை மறுப்பதற்கான ஒரு நியாயமாகப் பயன்படுத்த முடியாது என்று கூறினார்.

எவ்வாறாயினும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மாதவி திவான், மேல்முறையீட்டாளர் முக்கியமான தகவல்களை மறைத்துவிட்டார், அதுவே அவரது பணிநீக்கம் செய்யப்படுவதற்கு போதுமான காரணம் என தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு மனுதாரர் சதீஷ் சந்திர யாதவ் வேண்டுமென்றே சம்பந்தப்பட்ட தகவல்களை மறைக்க மேற்கொண்ட முயற்சி என்று நாங்கள் கருதுகிறோம். இந்த புறக்கணிப்புதான் தகுதி காலத்தின் போது அவரது சேவையை நிறுத்துவதற்கு வழிவகுத்தது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், மேல்முறையீடு செய்த சிஆர்பிஎஃப் அதிகாரிகளின் இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்