இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா..!
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்நாளான இன்று மாலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெறும்.
இன்று முதல் முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்று இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வருகிறார். 9ம் நாள் (5ம் தேதி) மற்றும் நிறைவு நாளான அன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.