பாப்புலர் பிராண்ட்க்கு விரைவில் தடை.? பாஜகவினரே உஷார்.! எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை.!
பாஜக தலைவர்கள், தொண்டர்கள் 2-3 மாதங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக கோவை, கன்னியாகுமரி பகுதியில் செயல்பட்டு வரும் பாஜகவினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். – ஆடியோ வழியாக பாஜகவினர்களுக்கு தமிழக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த வாரம் என்.ஐ.ஏ எனும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய சோதனையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் அங்கங்கே பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. கோவை மட்டுமல்லாது, கன்னியாகுமரி, மதுரை என ஒரு சில மாவட்டங்களிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது.
இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் பாஜகவினருக்கு அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
அதில், ‘ விரைவில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவிற்கு தடை ஏற்படலாம். அதற்காக மத்திய உள்துறை செயலகம் முயற்சித்து வருகிறது என டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அதனை ஒருவேளை அப்படி தடை செய்து விட்டால் பாஜகவினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பாஜக தலைவர்கள், தொண்டர்கள் 2-3 மாதங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக கோவை, கன்னியாகுமரி பகுதியில் செயல்பட்டு வரும் பாஜகவினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கேரளாவில் உள்ள தாக்கம் தமிழ்க்கத்திற்கு வர வாய்ப்புள்ளது. ஒருவேளை வரலாம் வராமலும் இருக்கலாம். எதற்கும் தயாராக, பாதுகாப்பாக இருக்க வேண்டும். ‘ என அந்த ஆடியோவில் அண்ணாமலை பேசியுள்ளார்.