உடல் எடையை குறைக்க உதவும் தயிர் ரெசிபிக்கள்..

Default Image

செயற்க்கையாகவோ அல்லது இயற்கையாகவோ உடையை குறைக்க பலரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

தயிர் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதிக கொழுப்பில்லாத தயிரை எடுத்து கொள்பவர்களின் உடலில் கொழுப்பின் அளவு குறையும் என கண்டறியப்பட்டுள்ளது.

உடல் எடையை குறைக்க உதவும் சில தயிர் ரெசிபிக்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

1. ஓட்ஸ் தாஹி மசாலா :

life style

  • உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கான சிறந்த காலை மற்றும் இரவு உணவாக ஓட்ஸ் உள்ளது.
  • ஓட்ஸ் உடன் தயிரை சேர்த்து சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் தாஹி மசாலாவை வெறும் 20 நிமிடங்களில் தயார் செய்து சாப்பிடலாம்.

2. தாஹி சன்னா :

life style

  • புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த வேகவைத்த கொண்டைக் கடலையுடன் தயிர் கலந்து தயாரிக்கப்படும் தாஹி சன்னா மிகவும் பிரபலமான சாட் வகையாகும்.
  • தயிர், சன்னாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், சில்லி பிளக்ஸ், உப்பு, சாட் மசாலா, சீரகத்தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சுவையான மசாலா தாஹி சன்னா செய்து சாப்பிடலாம்.

3. லோ ஃபேட் தாஹி சிக்கன் :

life style

  • உடல் எடையை குறைக்க மதிய உணவிற்கு என்ன சாப்பிடுவது என குழப்பமாக இருப்பவர்கள் குறைந்த கொழுப்புள்ள கோழிக்கறியுடன் தயிர் சேர்த்து சமைக்கப்படும் லோ ஃபேட் தாஹி சிக்கனை முயற்சித்து பார்க்கலாம்.

4. மிக்ஸ் வெஜ் ரைதா :

life style

  • மதிய உணவிற்கு சைடு டிஸ் போன்ற இது உடல் எடைக்கு ஏற்றது ஆகும்.
  • தயிர் உடன் நறுக்கப்பட்ட வெங்காயம், தங்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லி தழைகள், உப்பு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிடலாம்.

5. பிளக்ஸ் சீட் ரைதா :

LIFE STYLE

  • ஓட்ஸை போலவே பிளக்ஸ் சீட் எனப்படும் ஆளி விதைகளும் உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
  • தயிருடன் செய்யப்படும் ரைதா ரெசிபி சுவையாக இருப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • அத்துடன் ஆளி விதைகளில் ஓமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்