வண்ணாரப்பேட்டை சிறுமி வழக்கு.! 8 பேருக்கு ஆயுள்.! 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை.!
வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 21 பேரில் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபட்ட வழக்கில், மொத்தம் 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
இதில், 26 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் 4 பேர் தலைமறைவாகி விட்டனர். ஒருவர் விசாரணை காலத்தில் இறந்துவிட்டார். ஆதலால் 21 பேர் குற்றாவளிகள் என போக்ஸோ நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார்.
தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில். இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை எனவும், காவல் உதவி ஆய்வாளர், உணவு பொருள் வழங்கல் துறை உதவி பொறியாளர், பாஜக பிரமுகர் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் தண்டனை என போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தனது தீர்ப்பில் தண்டனை விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.