தமிழக அரசு இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – சசிகலா
விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை அவமதித்திருப்பது கோழைத்தனமான செயல் என சசிகலா ட்வீட்.
விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, கரும்புள்ளிகளுடன் ஆ.ராசாவின் படத்தை தொங்கவிட்டுள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெரியார் சிலையில் போர்த்தப்பட்டிருந்த துணையையும், ஆ.ராசா புகைப்படத்தையும் அகற்றி விட்டு, இது தொடர்பாக விசாரணை பெற்றுக்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து சசிகலா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை அவமதித்திருப்பது கோழைத்தனமான செயல், இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை அவமதித்திருப்பது கோழைத்தனமான செயல், இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
— V K Sasikala (@AmmavinVazhi) September 26, 2022