பொள்ளாச்சி பெட்ரோல் குண்டு வீச்சு – 3 பேர் கைது
பொள்ளாச்சியில், இந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் நிரப்பப்பட்ட கவர்களை வீசி தாக்கிய சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பொள்ளாச்சியில், இந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் நிரப்பப்பட்ட கவர்களை வீசி தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த முகமது ரபீக்,சாதிக் பாஷா, ரமீஷ்ராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.