தொடரை வென்ற இந்திய அணி நேற்று டி-20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்தது

Default Image

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. தொடர் 1-1 என்ற சம நிலையில் இருக்க, தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது இருபது ஓவர் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடை பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடி கேமரூன் க்ரீன் 21 பந்துகளில் 52 ரன்களும், டிம் டேவிட் 27 பந்துகளில் 54 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியில் அக்ஷர் படேல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

187 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் கோலி மற்றும் சூரியகுமார் ஆகியோரின் அதிரடியால் 1 பந்து மீதமிருக்க 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய சூரியகுமார்யாதவ் 69 ரன்களும், விராட் கோலி 63 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. ஆட்ட நாயகனாக சூர்யகுமாரும், தொடர் நாயகனாக அக்ஷர் படேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நேற்றைய போட்டியின் வெற்றியின் மூலம், இந்திய அணி ஒரு ஆண்டில் அதிக டி-20 வெற்றிகளைப் பெற்ற அணி என்ற உலக சாதனையைப் பெற்றது. 21 வெற்றிகளுடன் இந்திய அணி இந்த சாதனையைப் படைத்தது. இதற்கு முன்பு பாகிஸ்தான் அணி 2021 ஆம் ஆண்டில் 20 வெற்றிகளைப் பெற்றதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

மேலும் நேற்றைய வெற்றியின் மூலம் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி டி-20 போட்டிகளில் 31 வெற்றிகளைப் பெற்று (37 போட்டிகளில்) சாதனை படைத்தது. ரோஹித் சர்மா தற்போது கோலியை (30 வெற்றி,50 போட்டிகளில்) முந்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்