இன்று கோலாகலமாக தொடங்குகிறது மைசூர் தசரா திருவிழா..
கொரோன காரணமாக 2020 மற்றும் 2021ல் எளிமையாக கொண்டாடப்பட்ட உலக புகழ் பெற்ற மைசூர் தசரா திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
சாமுண்டா தேவி மகிஷாசுரனை வதம் செய்த வெற்றியை கொண்டாடும் வகையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனின் மரணத்திற்குப் பிறகு, நகரம் மைசூர் என்ற பெயரைப் பெற்ற தாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
மேலும் இந்த 10ம் நாள் தசரா(விஜயதஷ்மி) கொண்டாட்டங்களின் போது பல கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கண்கவர் ஊர்வலம் நடைபெறுகிறது.
மைசூர் தசரா-2022-ஐ கொண்டாட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை(செப் 24) ஒப்புதல் அளித்த நிலையில், இன்று தசரா விழாவை தொடங்கியும் வைக்கிறார்.