மியான்மரில் இருந்து தமிழர்களை மீட்க பயண செலவை தமிழக அரசு ஏற்கும்.!
மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை தாய்லாந்தில் இருந்து தமிழகம் கொண்டு வர, முழு பயண செலவையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனம் மூலம் தாய்லாந்து வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் சட்டவிரோத வேலைக்காக மியான்மர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு சட்டவிரோத வேலை என்று தெரிந்தவுடன் வேலை செய்ய மறுத்துள்ளனர்.
இதனை அடுத்து, அங்கு தவித்த தமிழகர்கள் தங்களை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு தகவல் அனுப்பினர். இதனை அடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், ‘மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் முழு பயண செலவையும் தமிழக அரசே ஏற்கும் எனவும், மியான்மரில் இருந்து தாய்லாந்து வந்துவிட்டால், தமிழகம் கொண்டு வர முழு பயண செலவையும் தமிழக அரசு ஏற்கும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு தகவல் அனுப்பியுள்ளது.