பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும் எனபதை கருத்தில் கொள்ள வேண்டும் – அண்ணாமலை
பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும் எனபதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பாஜக அமைதியை விரும்பக்கூடிய கட்சி என அண்ணாமலை பேட்டி.
கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என தொடர்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர்அண்ணாமலை, கடந்த இரு நாட்களாக பாஜக தொண்டர் மீது, சொத்துகள் மீது, அலுவலகம் மீது பல்வேறு தாக்குதல் நடப்பது கண்டிக்கத்தக்கது; பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும் எனபதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பாஜக அமைதியை விரும்பக்கூடிய கட்சி.
அமைதியின் முறையில் சென்று கொண்ருக்கிறோம்; 26ம் தேதி மாபெரும் அறப்போராட்டம் கோவையில் நடைபெறும். காவல்துறை 100 பாஜக தொண்டர்களை கைது செய்திருக்கிறார்கள்; ஆனால் 19 இடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ஒருவரை கூட கைது செய்யவில்லை.
மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணம் 95% கொடுக்கப்பட்டு விட்டது; அக்டோபர் 2026ல் எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.