கொள்ளை அழகில் ரசிகர்களை கொண்டாட வைத்த நஸ்ரியா… அடடேவில் ஆரம்பித்த அடுத்த ரவுண்டு…
நடிகை நஸ்ரியா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு “அடடே சுந்தரா” எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துவிட்டார் என்று கூறலாம். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நஸ்ரியா தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.
இதற்கிடையில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட குழந்தையுடன் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில், தற்போது நீல நிற உடையில் அட்டகாசமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். நஸ்ரியா சுண்டி இழுக்கும் பார்வையுடன் போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்- ஜோதிகா அண்ணியிடம் கற்றுக்கொண்ட பாடம்.! கொழுந்தியா வெளியிட்ட சூப்பரான தகவல்….
புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் நஸ்ரியா நீங்க எப்போதும் “க்யூட்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். நஸ்ரியா நீண்ட ஆண்டுகளாக படம் நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் கொஞ்சம் கூட குறையவில்லை, இதனால் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்புக்காக தான் காத்திருக்கிறார்கள்.
#NazriyaNazim pic.twitter.com/3ZVl3y9gev
— CineBloopers (@CineBloopers) September 24, 2022