அலுவலகம் வரக்கூடாது.. டீ குடிக்க நேரமில்லை.. போராட்டத்தில் இறங்கிய நெல்லை தூய்மை தொழிலாளர்கள்.!

Default Image

ஒரு இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வேறு இடத்தில் வேலை, புகார் கூற அலுவலகம் வரக்கூடாது, போதிய சம்பளம் இல்லை என பல்வேறு புகார்கள் கூறி நெல்லை தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நெல்லையில் இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான தூய்மை பணி தொழிலாளர்கள் மணக்காட்சி அலுவலகத்தில் குவிந்தனர். மேலும் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தையும் அறிவித்து தங்களது எதிர்ப்புகளை கூற ஆரம்பித்து விட்டனர்.

அதாவது, நெல்லை மாநகர் தூய்மை தொழிலாளர்களுக்கு தற்போது புதிய வருகை பதிவேடு முறை வந்துள்ளாதாம். அதன்படி, ஒரு வார்டில் கையெழுத்து போட்டுவிட்டு, வேறு வார்டில் வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கிறதாம்.

இதற்கான நேரம் குறைவாக குறைவாக இருப்பதாக அதிகாலை 6 மணிக்கு வேலைக்கு வரும் தங்களால் டீ கூட குடிக்க முடியாமல் இருக்கிறது என தங்கள் புகார்களை கூறினர்.

மேலும், தங்களுக்கு ஊதிய பற்றாக்குறை  இருப்பதாகவும், மேலும், புகார் கூறுவதற்கு மாநகராட்சிக்கு வரக்கூடாது எனவும் அதிகாரிகள் கூறுவதாகவும் புகார் கூறுகின்றனர். பி.எப் பணம் முறையாக கிடைப்பதில்லை. இறந்தவர்களுக்கு முறையான இழப்பீடு கிடைப்பதில்லை என பலவேறு புகார்களை முன்னிலைப்படுத்தி, நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று 740 தூய்மை தொழிலார்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பரவு தொழிலாளர்கள் உடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest