920 கோடி செலவில் தமிழக சுற்றுசூழல் மேம்பாட்டு பணிகள்.! முதல்வர் ஸ்டாலின் தகவல்.!
ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் மூலம் 920 கோடி நிதி கிடைத்துள்ளது. அதன் மூலம் தமிழக சுற்றுச்சூழல் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தரகுன்றிய இடங்களை கண்டறிந்து, அதனை மேம்படுத்த உள்ளோம். – பசுமை தமிழகம் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
இன்று மாவட்டந்தோறும், பசுமை தமிழகம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் நடைபெற்றது. அங்கு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், ‘ தற்போது காலநிலை மாற்றம் கண்டுள்ளது. மழை சீராக இல்லாமல் இருக்கிறது. காலநிலை மாற்றம் கண்டுள்ளது. தற்போது காலநிலை கணிக்கமுடியாத சூழலாக மாறியுள்ளது.
சில நாடுகளில் தோல் எறியும் அளவுக்கு அனல் காற்று வீசுகிறது.
இயற்கை நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். மண் வளம் கெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அதன் காரணமாகதான் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் மூலம் 920 கோடி நிதி கிடைத்துள்ளது. அதன் மூலம் தமிழக சுற்றுச்சூழல் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தரகுன்றிய இடங்களை கண்டறிந்து, அதனை மேம்படுத்த உள்ளோம்.
2018இல் ஏற்பட்ட கஜா புயலின் பொது பிச்சாவரம் பகுதியில் இருந்த அலையாத்தி கடல் தான் மக்களை காப்பாற்றியது.
நாட்டு மரங்கள் மக்களுக்கு நல்ல பயன் தருகிறது. மேலும், தட்ப வெப்ப நிலை தங்கியிருக்கும் மரங்களையே வளர்க்க வேண்டும். மேலும், சந்தனம் ,செம்மரம், ஈட்டி மரம் உள்ளிட்ட வருவாய் தரும் மரங்களை வளர்க்க உழவர்கள் ஊக்குவிக்கப்படுவர். ‘ என தனது உரையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.