#Rupee:ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 2வது நாளாக வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.
பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை நேற்று அறிவித்த பிறகு, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒருநாளில் பெரும் வீழ்ச்சி கண்டது. ரூபாயின் மதிப்பு இன்று 41 பைசா வீழ்ச்சியடைந்து இதுவரை இல்லாத அளவான 81.20 க்கு வர்த்தகம் செய்யபட்டது.
வங்கியில் தற்போது போதிய பணப்புழக்கம் இல்லாததால் ரிசர்வ் வங்கியால், பணமதிப்பு சரிவை மீட்க முடியாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று அந்நிய செலாவணி ஆலோசகர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க டாலருக்கு எதிராக அனைத்து நாணயங்களின் மதிப்பும் வீழ்ச்சி அடையும் நிலையில் ஃபெட், மேலும் வட்டி விகிதங்களை 4.6% வரை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.