2026இல் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும்.! காங்கிரஸ் எம்.பி நம்பிக்கை.!

Default Image

2026இல் மதுரையில் எய்ம்ஸ் கட்டப்படும். அந்த ஜப்பான் நிறுவனம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்கான பணிகளை இன்னும் மத்திய அரசு தொடங்கிவிலை – என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் தெரிவித்து இருந்தார். இந்த தகவல் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால் அடிக்கல் நட்டியதை தொடர்ந்து வேறு எந்த பணிகளும் அங்கு தொடங்கப்படவில்லை என்பதே உண்மை.

இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், ‘ இப்படிப்பட்ட பொய்யை ஜே.பி.நட்டா எப்படி தைரியமாக சொன்னார் என தெரியாவில்லை. தமிழர்களை ஏமாற்றும் வேலையை பாஜக நிறுத்தி கொள்ள வேண்டும்.

நம் நாட்டில், ஜப்பான் கடனுதவியால் கட்டப்படும் ஒரே எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக 2019 ஏப்ரலில் பிரதமர் மோடி அவர்களால்  அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வரை அதை தவிர வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை.’ என தெரிவித்தார் .

ஜப்பான் நிறுவனம் தாமதப்படுத்தினால், 50 சதவீத பணத்தை மாநில அரசு கொடுத்தால், மீதம் 50 சதவீத பணத்தை மத்திய அரசிடம் நாங்கள் பெற்று தருகிறோம் என அண்ணாமலை கூறியதை பற்றி பேசுகையில், கடனை கேட்டது மத்திய அரசு. நிலத்தை பெற்று தாருங்கள் கட்டி தருகிறோம் என கூறியது ஜப்பான் நிறுவனம். இந்த கதை கூட தெரியாமல் இப்படி பேசலாமா? உண்மையில் அண்ணாமலை ஐபிஎஸ் பிடித்தாரா என சந்தேகம் வருகிறது என கூறினார்.

மேலும், ‘ 90 சதவீத நிதியை ஜப்பான் நிறுவனம் வழங்கிவிடும். மீதம் 10 சதவீதம் மட்டுமே மத்திய அரசு வழங்க உள்ளது. 2026இல் மதுரையில் எய்ம்ஸ் கட்டப்படும். அந்த ஜப்பான் நிறுவனம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்கான பணிகளை இன்னும் மத்திய அரசு தொடங்கிவிலை என்பதே உண்மை.’ என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்