அரசு கல்லூரி அருகே டாஸ்மாக்.! 200க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டம்.!
சேலம் மாவட்டம் , சென்னிமலையில் அரசு கல்லூரிக்கு அருகே உள்ளே மதுபான கடையினை அகற்ற கோரி, பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் .
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சென்னிமலை எனும் இடத்தில் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு அருகே செல்லும் வழியில் அரசு மதுபான கடை உள்ளது.
கல்லூரி அருகே டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் மாணவர்கள் நலன் பாதிக்கப்படும் என்பதால் அந்த மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என பாமகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் சுமார் 200க்கும் அதிகமான பாமகவினர் கலந்துகொண்டனர். அரசு கல்லூரி அருகே, அரசு மேல்நிலை பள்ளியும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.