விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள் – ராதா கிருஷ்ணன்
விவசாயிகள் கருத்துக்கள் முழுமையாக கேட்கப்பட்டு அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ராதா கிருஷ்ணன் பேட்டி.
திருவள்ளூர் மாவட்டம் கச்சினத்தில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் இந்த ஆண்டு அதிக அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
குறுவை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள். விவசாயிகள் கருத்துக்கள் முழுமையாக கேட்கப்பட்டு அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.