#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு ஒத்திவைப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
டெண்டர் முறைகேடுகள் தொடர்பான எஃப்.ஐ.ஆர்.-களை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை அக்.12ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், டீக்கா ராமன் அமர்வு வழக்கை ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியின்போது மாநகராட்சி டெண்டர்கள் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழக லஞ்சஒழிப்புத்துறை 2 வழக்குகளை எஸ்பி வேலுமணி மீது பதிவு செய்திருந்தது.
கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களை உறவினர்களுக்கு வழங்கி ரூ.800 கோடி முறைகேடு செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிடக்கோரி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜுன்னா முறையீட்டை ஏற்று இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று விசாரணைக்கு வந்தபோது, எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை அக்.12ம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.