இல்லம் தேடி கல்வி திட்டம் – பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு..!

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

இல்லம் தேடிக்கல்வி திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி,மொழிபெயர்ப்பு பணி,மின் பாடப்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

182 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் வாயிலாக நியமிக்கலாம் என்றும், தலைமை ஆசிரியர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமனம்  செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.7,500,ரூ.10,000,ரூ.12,000 என்ற தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் என்றும், தற்காலிக ஆசிரியர் நியமனத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்